ராக்கெட்டரி – விமர்சனம்
ராக்கெட்டரி விமர்சனம்
ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி வந்திருக்கும் அற்புதமான படைப்பு ராக்கெட்டரி.
இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் மகத்தான பங்களிப்பை செய்த விஞ்ஞானிக்கு தேசத் துரோகி என்ற பட்டம் வந்தது குறித்தும் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதும்தான் இப்படத்தின் அடிநாதம்.
நம்பி நாராயணன் தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பதிலிருந்து அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் காட்சியாக விரிவடைகிறது.
இந்தியா இன்றுவரை பயன்படுத்தும் விகாஸ் இன்ஜின் எவ்வாறு உருவானது என்பது போன்ற விஷயங்களைக்கூட அலுப்பு தட்டாமல் சுவையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான் படத்தின் பலம் என்று சொல்லலாம்.
நம்பி நாராயணன் பார்த்தேயிராத மாலத்தீவைச் சேர்ந்த பெண் ஒருத்தியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொய்கதை புனைந்து, அவருக்கு சேசத்துரோகி என்ற பட்டமும் கொடுத்து காவல்துறை விசாரணை...
