ராக்கெட்டரி – விமர்சனம்

0

 42 total views,  1 views today

ராக்கெட்டரி விமர்சனம்

ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி வந்திருக்கும் அற்புதமான படைப்பு ராக்கெட்டரி.

இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் மகத்தான பங்களிப்பை செய்த விஞ்ஞானிக்கு தேசத் துரோகி என்ற பட்டம் வந்தது குறித்தும் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதும்தான் இப்படத்தின் அடிநாதம்.

நம்பி நாராயணன் தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பதிலிருந்து அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் காட்சியாக விரிவடைகிறது.

இந்தியா இன்றுவரை பயன்படுத்தும் விகாஸ் இன்ஜின் எவ்வாறு உருவானது என்பது போன்ற விஷயங்களைக்கூட அலுப்பு தட்டாமல் சுவையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான் படத்தின் பலம் என்று சொல்லலாம்.

நம்பி நாராயணன் பார்த்தேயிராத மாலத்தீவைச் சேர்ந்த பெண் ஒருத்தியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொய்கதை புனைந்து, அவருக்கு சேசத்துரோகி என்ற பட்டமும் கொடுத்து காவல்துறை விசாரணையில் சித்ரவதை செய்வதெல்லாம் கண்ணில் நீர் வரவைக்கும் காட்சிகள்.

நம்பி நாராயணன் வேடத்தில் நடித்திருப்பதுடன் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியதோடு நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் மாதவனுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.

ராக்கெட் சயின்ஸ் என்றாலே பிசிக்ஸ் வகுப்புபோல் இல்லாமல் சென்டிமெண்ட் காட்சிகள், மனதைத் தொடும் வசனங்கள் என்று படத்தை உருவாக்கிய புத்திசாலித்தனம்தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது.

மாதவன் மனைவியாக வரும் சிம்ரன், உண்ணியாக வரும் விஞ்ஞானி என்று படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் மறக்க முடியாத பாத்திரங்களே.

படத்தின் மிகப்பெரிய பலம் சாம் சி.எஸ். பின்னணி இசை. மனிதர் அசத்தியிருக்கிறார்.
நம்பி நாராயணன் மீண்டும் பணிக்கு திரும்ப வருகையில் சக விஞ்ஞானிகளுடன் உரையாடுவது நாம் வாழும் சூழலையும், நம் நாட்டின் நிலையையும் யதார்த்தமாக பிரதிபலிக்கிறது.

நம்பி நாராயணன் குடியரசுத் தலைவர் வருது பெறும் காட்சியை படத்துன் இணைதிருப்பது அருமை.படத்தின் இறுதிப்பகுதியில் நிஜமான நம்பி நாராயணன் வரும் காட்சிகளை இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் ராக்கெட்டரி.

 

 

Share.

Comments are closed.