விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!
தளபதி விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!!
ரோமியோ பிக்சர்ஸ் வெளியீட்டில் “சார்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் !!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்திய...




