விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!

0

Loading

தளபதி விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!!

ரோமியோ பிக்சர்ஸ் வெளியீட்டில் “சார்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் !!

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காக்கா முட்டை, விசாரணை முதலாக பல வெற்றிப்படங்களை வழங்கிய வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.

முன்னணி நட்சத்திர நடிகர் விமல், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

‘கன்னிமாடம்’ மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி அருமையான கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக, சார் படத்தை உருவாக்கியுள்ளார்.

போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இப்படத்தை இம்மாத இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. பட வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Share.

Comments are closed.