ஐந்தாம் வேதம் _ விமர்சனம்
ஐந்தாம் வேதம் _ விமர்சனம்
அக்டோபர் 25ஆம் தேதி முதல் ஜி5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய இணைய தொடர் ஐந்தாம் வேதம்.
சாய் தன்ஷிகா, தேவதர்ஷினி, சந்தோஷ் பிரதாப், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்திருக்கும் இத்தொடரை அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன் மற்றும் நல்லம்மை ராமநாதன் தயாரித்திருக்கிறார்கள்.
'மர்மதேசம்' தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் நாகா இத்தொடரை இயக்கியிருக்கிறார். தன் தாயின் அஸ்தியை கரைக்க காசி செல்லும் சாய் தன்ஷிகாவிடம் அங்குள்ள சாமியார் ஒருவர் ஒரு பெட்டியை கொடுத்து அதை தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அய்யங்கார் புரம் என்ற ஊரில் உள்ள கோவிலில் கொடுக்கச் சொல்கிறார். இதை சொல்லி முடித்ததும் மர்மமான முறையில் இறந்து போகிறார் அந்த சாமியார்.
தன்ஷிகாவுக்கு இந்த வேலையை செய்ய இஷ்டமில்லை என்பதால் அவர் தொடர்ந்து தனது பணியின் நிமித்தமாக திருவனந்தபுரம் செல்ல திட்டமிடுகிறார்.
பெட்...




