Saturday, August 29

Tag: sakshi agarwal

பாகிஸ்தானில் ஒரு சாக்ஷி அகர்வால்!

பாகிஸ்தானில் ஒரு சாக்ஷி அகர்வால்!

News
"தன்னைப் போன்ற உருவம் கொண்டவர் பாகிஸ்தானி நட்சத்திரம் ஆயிஷா உமர்" என கூறுகிறார் நடிகை சாக்ஷி அகர்வால்! பிரபல தென்னிந்திய நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம், சின்ட்ரெல்லா, டெடி, பகீரா போன்ற படங்களில் நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டவர், அண்மையில் ஒரு ஆச்சரியமிக்க ஒரு நிகழ்வாக, தன்னைப் போன்ற உருவம் கொண்ட பாகிஸ்தானின் பிரபல நடிகை ஆயிஷா உமர் அவர்களை கண்டார். இவை அனைத்தும் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் பகிர்ந்தபோது ஆரம்பித்தது, அதில் அவரது சிறந்த ஆளுமை மற்றும் ஃபேஷன் சென்ஸ் வெளிப்படுத்தப்பட்டது. இதைக் கண்ட ஆயிஷா உமரின் ரசிகர்கள் இரண்டு நடிகைகளின் ஒரே மாதிரியான தோற்றத்தை வேகமாக கவனிக்க ஆரம்பித்ததால், கருத்து பகுதி ஆயிஷாவை குறித்த குறிப்புகளாலும் ஒப்பீடுகளாலும் நிரம்பியது. இவ்வளவு வரவேற்பை ஆயிஷா உமரின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவரது ரசிகர்கள் டேக் செய்ததால்,அவரின் கவனத்திற்கும் வந்தது. ...
முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்!

முதியோர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சாக்‌ஷி அகர்வால்!

News
தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்! காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா மற்றும் பல வெற்றிகரமான படங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால் சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஒரு தனிமை விரும்பியாக அறியப்பட்ட அவர், தனக்கான சிறப்பான நாளை ஓர் முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் செலவிட்டார். அவர் சில சுவையான உணவுகளை தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார். பின்னர், அவர் வயதானவர்களுடன் சில விளையாட்டுகளை விளையாடி, ஆடிப்பாடி மகிழ்ந்து இதயத்தை வருடும் தருணங்களை பகிர்ந்து கொண்டார். இந்த சிறப்பான நிகழ்வை தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். நெட்டிசன்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் ஆதரவையும் சாக்ஷிக்கு அளித...
பெண்கள் தினத்தை பெண் பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடினார் சாக்ஷி அகர்வால்!

பெண்கள் தினத்தை பெண் பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடினார் சாக்ஷி அகர்வால்!

News
பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன் விளையாட்டு, நடனம் மற்றும் கலந்துரையாடல்களுடன் கொண்டாடினார் நடிகை சாக்ஷி அகர்வால்! காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகீரா மற்றும் பிற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகை சாக்ஷி அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார்.  உடற்தகுதி, ஃபேஷன் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது போன்ற விஷயங்கள் மீதான அவரது வைராக்கியம்தான் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும்  அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்துள்ளது. மகளிர் தினத்தின் சிறப்புகளை நினைவுகூரும் வகையில், சாக்ஷி அகர்வால் பெண் பத்திரிக்கையாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அங்கு அவர்கள் விளையாட்டு போட்டிகளில் விளையாடினர், உடற்பயிற்சிகள் செய்தனர், மேலும் சுவாரஸ்யமான உரையாடல்களையும் மேற்கொண்டனர்.  பத்திரிக்கையாளர்கள் தங்களின் வெ...
வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்!

வித்தியாசமான முறையில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்!

News
'வேலன்டைன்ஸ் டே' என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்! ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி. தான் நடித்த 'குட்டி ஸ்டோரி' படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 'நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிற...

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சாக்ஷி அகர்வால்!

News
தமிழ் திரை உலகில் தொடர்ந்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் காலக் கட்டம் இது. Holly wood மற்றும் ஹிந்தி திரைப் படங்களின் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு வரும் படங்களின் எண்ணிக்கை தமிழ் திரை உலகில் வெகுவாக வளர்ந்து வருகிறது.  நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் இந்த வகை படங்கள் பெரும்பாலும் action படங்களே.     பிக் பாஸ் சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற சாக்ஷி அகர்வால் பெயரிடப் படாத ஒரு புதிய படத்தின் மூலம் action அவதாரம் எடுக்க இருக்கிறார். "களிறு" என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத இந்த படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது " பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந...
நெல்லைத் தமிழில் பேசி அசத்தும் சாக்‌ஷி அகர்வால்!

நெல்லைத் தமிழில் பேசி அசத்தும் சாக்‌ஷி அகர்வால்!

News
ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்‌ஷி அகர்வால் ஒன் ஆப் த ஹீரோயின். ஏற்கெனவே இவர் மலையாளத்தில் பிஜுமேனன் ஜோடியாக நடித்த படம் இவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. கூடுதல் செய்தியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்த...