“தலைவி” பாடலை மூன்று மொழிகளில் வெளியிடும் சமந்தா!
முன்னணி நாயகி சமந்தா “தலைவி” படத்தில் முதல் பாடலை மூன்று மொழிகளில் வெளியிடுகிறார் !
புரட்சி தலைவி, தமிழக பெண்களின் ஆதர்ஷ நாயகி, மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் சினிமா, அரசியல் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, பிரதிபலிக்கும் “தலைவி” படத்தின் டிரெய்லரை நாயகி சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கங்கனா ரனாவத் நடிப்பில் படத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புத மேஜிக்கை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நாயகி சமந்தா இந்தி மொழியில் “ஜலி ஜலி”, தமிழில் “மழை மழை”, தெலுங்கில் “இலா இலா” என மூன்று மொழிகளிலும் “தலைவி” படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிபடங்களை தந்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நாயகி சமந்தா தற்போது இந்தியில் பரபரப்பான இணைய தொடரான “ஃபேமிலி மேன்” இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதன் மூ...
