மிரட்டல் கெட்டப்பில் சம்பத்ராம் நடித்திருக்கும் “காந்தாரா சாப்டர்-1”
படு மிரட்டல் கெட்டப்பில் சம்பத்ராம் நடித்திருக்கும் "காந்தாரா சாப்டர்-1"
உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற "காந்தாரா சாப்டர்-1" திரைப்படத்தில் சம்பத்ராம் ஆகிய நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனா, குறைந்த காட்சிகள் வந்தாலும், நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன்.
வித்தியாசமான தோற்றத்தில் 'காந்தாரா சாப்ட்டர்-1' படத்தில் நடித்துள்ளேன். முகம் மற்றும் உடல் முழுவதும் கருப்பு கலர் மேக்கப்பில், குறிப்பாக முகத்தில் முதிர்ந்த முதுமையில் மேக்கப் போட்டு இருப்பேன். மேக்கப் போடுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைப்பதற்கு ஒரு மணி நேரமாகும். மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன்...


