Tag: Samyuktha Hegde
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”
ரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதிலும் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் அவர் அமைக்கும் இசை அவரை இசை உலகின் நாயகனாகவே மாற்றி விடுகிறது. "கோமாளி" படத்தின் பாடல்கள் அவருடைய உற்சாகமூட்டும் இசைக்கென்றே எல்லோராலும் முணுமுணுக்க படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது எனக் கூறும் ஆதி படத்தை பற்றியும் , படத்தில் உள்ள தனது இசையை பற்றியும் கூறுகிறார்.
"கோமாளி" படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிக மிக சவாலாக இருந்தது. எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால் , குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை..இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது.90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக் கட்டத்தின் உணர்ச்சிகள் எனக்கு எளிதாகவே புரிந்தது. என...
வாட்ச்மேன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டே
கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகச்சிறந்த நடிப்பு என்பது அரிதிலும் அரிதான ஒரு கூட்டணி. தனது நடிப்பு திறமையை நிரூபித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே,இயற்கையாகவே இந்த வரத்தை பெற்றிருக்கிறார். இவர் ஏற்கனவே தென்னிந்திய ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்திருக்கிறார், குறிப்பாக கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரது பப்பி படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் வாட்ச்மேன் படம் தமிழில் அவரின் முதல் படமாகியிருக்கிறது.
!
இது குறித்து நடிகை சம்யுக்தா கூறும்போது, "நான் இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் அல்லது தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச்சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2-படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்...




