“சர்தார்” படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி!
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படத்தில் அப்பா - மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்தி -க்கும் பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது.
கொடைக்கானல் காட்டு பகுதிகளில் படமாக்கப்ப்பட்டு வந்த இதன் படபிடிப்பு மைசூரில் இப்பொழுது நடை பெறுகிறது. அப்பா கார்த்தியின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மொத்த குழுவும் மைசூருக்கு சென்றுள்ளது.
‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின...
