“சர்தார்” படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி!

0

Loading

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படத்தில் அப்பா – மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்தி -க்கும் பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது.

கொடைக்கானல் காட்டு பகுதிகளில் படமாக்கப்ப்பட்டு வந்த இதன் படபிடிப்பு மைசூரில் இப்பொழுது நடை பெறுகிறது. அப்பா கார்த்தியின் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மொத்த குழுவும் மைசூருக்கு சென்றுள்ளது.

‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் அப்பா மகன் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அப்பா மகன் இருவருக்குமே ஆக்சன் காட்சிகள் உள்ளது, இந்த காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. திரையில் இதுவரை ரசிகர்கள் கண்டிராத பிரமாண்டமான ஆக்சன் கட்சியாக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் உருவாக்கி வருகிறார்.

கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். யூகி சேது ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் “சர்தார்” படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன்,
கலை இயக்கம் – கதிர்,
எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின்ரகு,
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்,
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜாD, பாடல்கள் – யுகபாரதி,
VFX – ஹரிஹர சுதன்,
நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி,
ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் இராமசாமி,
PRO- ஜான்சன்.

Share.

Comments are closed.