Thursday, June 25

Tag: sathya movies

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

News
'இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்! சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை...
கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளிவரும் ‘இரண்டு வானம்’!

கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளிவரும் ‘இரண்டு வானம்’!

News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’! விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது. இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகிலனர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்தில் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும...
ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாரிக்கும் சத்யா மூவிஸ் !

ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாரிக்கும் சத்யா மூவிஸ் !

News
“தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாராகிறது ! சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த அருளாளர் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது. திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன். மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்...