சட்டம் என் கையில் _ விமர்சனம்
சட்டம் என் கையில் _ விமர்சனம்
துவக்கத்திலிருந்து இறுதிவரை இப்படி ஒரு விறுவிறுப்பான படத்தை பார்த்து எவ்வளவு காலம் ஆயிற்று?
ஒரே இரவில் நடக்கும் அட்டகாசமான அதிரடி த்ரில்லர் சட்டம் என் கையில்.
ஏற்காடு மலை... இரவு நேரம்... ஏதோ சிந்தனையுடனும், ஒருவகை பரபரப்புடனும் மது அருந்தியபடி காரை ஓட்டிக்கொண்டு வருகிறார் சதீஷ்.
காரிருள் நேரத்தில் எதிரே வந்த பைக் மீது சற்றும் எதிர்பாராமல் கார் மோதுகிறது. பைக் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணடைகிறார்.
பயத்தில் என்ன செய்வது என்று புரியாத நிலையில் இறந்தவரின் உடலை உடலை தனது கார் டிக்கியில் ஏற்றி பயணத்தைத் தொடர்கிறார் சதீஷ். இடையில் போலீஸ் செக் போஸ்ட்...
திடீரென டென்ஷன் ஆனால் வார்த்தைகள் குளறி வாய் திக்குவது சதீஷ்க்கு ஏற்படும் வழக்கம். இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் போது சதீஷுக்கு வாய் திக்குவதால் இன்ஸ்பெக்டர் திக்குவாயன் என்று சொல்ல ...
