ஸ்கூல் _ விமர்சனம்
வெற்றி தோல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... எதையும் சுலபமாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உணர்த்துவதற்கு உருவாக்கப்பட்ட படம் ஸ்கூல்.
இரண்டாம் இடத்தில் உள்ள தனது பள்ளியை முதல் இடத்திற்கு கொண்டுவர, அதன் தாளாளர் முயற்சிக்கிறார்.
இதற்காகவே பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்ஸ் பகவதி பெருமாள் 'மைண்ட் செட் ஆஃப் சக்சஸ்' என்ற நூலை எழுதி வெளியிடுகிறார்.
தலைமை ஆசிரியர் எதிர்பார்த்த நேர்மறை சிந்தனைக்கு மாறாக, இந்த நூல் எதிர்மறை சிந்தனைகளை மாணவர்கள் இடையே விதைக்கிறது.
தொடர்ந்து பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
மாணவ மாணவியர் பலரின் உயிரை பலி வாங்கும் அளவுக்கு நிலைமை செல்கிறது.
பள்ளியில் உலவும் ஆவிகளை கட்டுப்படுத்தி, அங்கு நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சாமியார் ஆர்கே வித்யாதரன் வருகிறார்.
அவரது முயற்சி வெற்றி அடைந்ததா இல்லையா என்பது...
