சீமான் -ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் “அமீரா”
தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "அமீரா". செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா "அமீரா" என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..
சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
பல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..
அமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.
இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா ...




