சேத்துமான் – விமர்சனம்
சேத்துமான் - விமர்சனம்
தயாரிப்பாளர் அவதாரமெடுத்து, தரமான படங்களை மட்டுமே தொடர்ந்து தரும் இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படைப்புதான் சேத்துமான்.
பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற கதையை அறிமுக இயக்குநர் தமிழ் அருமையாக திரைக்கதை அமைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார்.
பொட்டல்வெளிக் காட்டில் பூச்சியப்பன் என்ற பெரியவர் தன் பேரன் குமரேசனை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். "நம் வீடு மட்டும் ஊரிலிருந்து ஏன் இவ்வளவு தூரம் விலகியிருக்கிறது?" என்று தாத்தாவிடம் கேட்கிறான் பேரன்.
பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும், திரும்ப அழைத்து வரும்போதும், படிப்பின் அவசியத்தையும் அது மட்டுமே ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மை மீட்டு தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் என்பதையும் தாத்தா தன் பேரன் குமரேசனுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருக்கிறரா்.
குமரேசனின் தாய் தந்தை இருவருமே ஆதிக்க சக்தியின் அடங்காத ஜாதி வெறிக்கு...
