“பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ்!
16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ்!
16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது.
படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren), சோடா பாபுவாக (Soda Babu) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர...



