Tag: Shilpa Manjunath
நட்டியுடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்..!
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ப்ரொடக்ஷன் நம்பர் .1' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.
படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா...
மே-24முதல் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..!
கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.
'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
...
காதல் கதையல்ல – காதலை பற்றிய கதை” இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி
தமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின் கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கௌதம் மற்றும்...
“இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்துக்காக அனிருத் பாடிய பாடல்…
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சாதனை சிலரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தான் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நேரடி உதாரணமாக செயல்படுகிறார். அவர் அனைத்து பாடல்களில் தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார். அனைத்து வகைகளிலும் பாடல்களைப் பாடுபவர் என்று அறியப்படும் அனிருத், தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள் இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்துக்காக 'கண்ணம்மா' என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்.
படக்குழுவினர் நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெ...






