‘கபடதாரி’ படக்குழு சிபிராஜூக்கு கொடுத்த சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு!
‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு!
- மகிழ்ச்சியின் உச்சத்தில் சிபிராஜ்-
கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ், இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு
திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவினர் சர்பிரைஸ்
பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிப்படைந்த சினிமாத்துறை தற்போது மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. திரைப்பட
படப்பிடிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாதியில் நின்று போன படப்பிடிப்புகள் மீண்டும்
தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின்
கட்டுப்பாடுகளையும், விதிமுற...








