5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்த ‘சிக்மா ’ பாடல்!
ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.
திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ...
