Saturday, October 25

Tag: Sivarajkumar

திரைப்படமாகும் கும்மடி நரசைய்யா வாழ்க்கை வரலாறு!

திரைப்படமாகும் கும்மடி நரசைய்யா வாழ்க்கை வரலாறு!

News
டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  & கான்சப்ட்  வீடியோ வெளியானது ! அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும்,  யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக,  பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு  வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்கும...
டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் இம்மாதம் 24ஆம் தேதி அறிவிப்பு!

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் இம்மாதம் 24ஆம் தேதி அறிவிப்பு!

News
கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னன், வசூல் சக்கரவர்த்தி டாக்டர் ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ( ஏப்ரல் 24 ) புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகிறது! கன்னடத் திரையுலகில் தன்னிகரற்ற வசூல் மன்னனாகத் திகழும் 'கருநாட சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்தப் படத்தை சாகர், கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து ஷ்ரிதிக் மோஷன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார்கள். இது இந்த நிறுவனத்தின் முதல் படமாகும். மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை பாலாஜி மாதவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குநர் பி.வாசு அவர்களின் தங்கை மகனான பாலாஜி மாதவன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் இயக்குநர் ஆர்.மாதவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். படத்தின் தலைப்பை விரைவிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தனித்துவமான கதையம்சம் கொண்ட படமா...
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்” !  

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்” !  

News
இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான "அட்ரஸ்" திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும்,  ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின்  டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார். கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் கூறியதாவது...  இயக்குநர் இராஜமோகன்  எனது நீண்ட கால நண்பர் சமீபத்தில் அவரை சந்தித்தபோது, அவரின் "அட்ரஸ்" படம் குறித்து கேளிப்பட்டேன். கதையின் மையமே மிக வித்தியாசமாக இருந்தது. படத்தின் டீஸரை எனக்கு காட்டினார். டீஸர் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் டைட்டிலே கதை சொல்வதாக இருந்தது. இந்தப்படம் ஒரு மாற்றத்தை தரும்...
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணையும் விஜய்மில்டன்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணையும் விஜய்மில்டன்!

News
சமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் 'கடுகு'. இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படங்கள்  பேசப்பட்டன. அக்கதைகளின் ஆழத்தை அறிந்த பலரும் பாராட்டினார்கள்.  தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ள விஜய்மில்டன் இப்போது கன்னடத் திரை உலகத்திற்குள் நுழைகிறார்.  இவர் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார்.   சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “டகரு” ( Tagaru ) . இதில் வில்லனாக நடித்து மக்களிடம் பரபரப்பாக பேசபட்டவர் டாலி தனஞ்ஜெயா. இந்த இருவரும் மீண்டும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது. அதனால், இருவரை...