அமெரிக்க இசைப்போட்டியில் தமிழ் பாடலுக்கு வெற்றி தேடித்தந்த எஸ்.ஜே.ஜனனி!
*உலக அமைதிக்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றும் தமிழ் பெண் இசையமைப்பாளர்
*உலக அமைதிப் பாடல் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜனனிக்கு அக்-2௦ல் பாராட்டு விழா நடத்தும் பிரம்மா குமாரிகள் அமைப்பு
*பிரபா பட இசையமைப்பாளர் செய்த உலக சாதனை ; அக்-2௦ல் பிரம்மா குமாரிகள் அமைப்பு பாராட்டு விழா
இசையை ஒரு கடல் என்று சொல்வார்கள்.. ஆனால் ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என இசைக்கடலில் முங்கி முத்தெடுத்து பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் தான் எஸ்.ஜே.ஜனனி. கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார் என்றால் இதைவிட மிகப்பெரிய சாதனை வேறு ஏதும் இருக்க முடியாது. அதேபோல இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, சமீபத்தில் கூட கலைம...
