முகவரி தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்!
தமிழக-கேரள அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியை சொலலும் ‘அட்ரஸ்’ பட பாடல்.. வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்!
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இந்த படத்தை இயக்குகிறார். கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த பூஜா ஜவேரி என இரண்டு கதாநாயகிகள் இதில் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, இசக்கி பரத், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் முன்னணி ஹீரோ ஒருவர் முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (கிரிஷ்.G) இசையமைத்துள்ளார். கிருஷ்ணகுமார்-வாசன் இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, தமிழரசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சினே...


