சூது கவ்வும் 2 விமர்சனம்
சூது கவ்வும் 2 விமர்சனம்
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சூது கவ்வும்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்திருக்கிறது.
டார்க் காமெடி குறித்து அதிகம் அறிமுகம் இல்லாத தமிழ் பட ரசிகர்களுக்கு அன்று வந்த 'சூது கவ்வும்' நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அத்துடன் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலை பெற வழி வகுத்த முக்கிய படங்களில் ஒன்று 'சூது கவ்வும்'.
இரண்டாம் பாகம் எப்படி இருக்கின்றது என பார்ப்போமா?
ஆளும் கட்சி நிறுவனரான வாகை சந்திரசேகர் கோமாவுக்கு சென்று விட, ஊழல்வாதியான ராதாரவி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். நேர்மையான அரசியல்வாதியான எம் எஸ் பாஸ்கரின் மகன் கருணாகரன்,
ஊழல் அரசியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் கருணாகரனுக்கும், முதல்வர் ராதா ரவிக்கும் முடிவு கட்ட திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார் வாகை ச...
