சூது கவ்வும் 2 விமர்சனம்
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்திருக்கிறது.
டார்க் காமெடி குறித்து அதிகம் அறிமுகம் இல்லாத தமிழ் பட ரசிகர்களுக்கு அன்று வந்த ‘சூது கவ்வும்’ நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அத்துடன் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலை பெற வழி வகுத்த முக்கிய படங்களில் ஒன்று ‘சூது கவ்வும்’.
இரண்டாம் பாகம் எப்படி இருக்கின்றது என பார்ப்போமா?
ஆளும் கட்சி நிறுவனரான வாகை சந்திரசேகர் கோமாவுக்கு சென்று விட, ஊழல்வாதியான ராதாரவி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். நேர்மையான அரசியல்வாதியான எம் எஸ் பாஸ்கரின் மகன் கருணாகரன்,
ஊழல் அரசியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் கருணாகரனுக்கும், முதல்வர் ராதா ரவிக்கும் முடிவு கட்ட திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார் வாகை சந்திரசேகர்.
இந்த நிலையில் கருணாகரனை பணத்துக்காக கடத்துகிறார் மிர்ச்சி சிவா.
இதை மையக் கருவாகக் கொண்டு சூது கவ்வும் 2 உருவாக்கப்பட்டிருக்கிறது.
கதை திரைக்கதை இரண்டிலுமே கோட்டை விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ் ஜே அர்ஜுன் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் நிறைகளை விட குறைகளே அதிகம்.
எப்போதும் நல்ல கதைகளை தேர்வு செய்யும் தயாரிப்பாளர் சி வி குமார் இந்த கதையை படமாக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்பது புரியாத புதிர்தான்.
எல்லோரும் வெகுவாக ரசித்த ஒரு வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து ரசிகர்களை நோகடிக்க கூடாது என யாராவது நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கினால்தான் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் போலிருக்கிறது.
சூது கவ்வும் 2 படத்தை தயாரித்து பணத்தை வீணாக்கியதற்கு பதிலாக ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தால் கூட நாள் காசு பார்க்கலாம் பார்த்திருக்கலாம்.
இதுக்கு மேலே என்னத்தை சொல்ல…