சொப்பன சுந்தரி – விமர்சனம்
சொப்பன சுந்தரி - விமர்சனம்
எஸ்.ஜி.சார்லஸ் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா, வாய் பேச முடியாத அக்கா மற்றும் அம்மாவுடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.
பொறுப்பாக இருக்கக வேண்டிய ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரனோ தன் பொறுப்பை மறந்து திருணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் சென்று விடுகிறார்.
நகைக்கடை பரிசுக்கூப்பன் ஒன்றின் மூலம் ஒரு கார் ஐஸ்வர்யாவுக்கு பரிசாகக் கிடைக்கிறது.பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வருவதை நினைத்து குடும்பமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
பரிசாக வரும் காரை வைத்து அக்காவின் திருமணத்தை நல்லவிதமாக நடித்திவிடலாம் என ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டமிடுகிறார். ஆனால் ...
