சொப்பன சுந்தரி – விமர்சனம்

0

 118 total views,  1 views today

சொப்பன சுந்தரி – விமர்சனம்

எஸ்.ஜி.சார்லஸ் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா, வாய் பேச முடியாத அக்கா மற்றும் அம்மாவுடன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

பொறுப்பாக இருக்கக வேண்டிய ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரனோ தன் பொறுப்பை மறந்து திருணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் சென்று விடுகிறார்.

நகைக்கடை பரிசுக்கூப்பன் ஒன்றின் மூலம் ஒரு கார் ஐஸ்வர்யாவுக்கு பரிசாகக் கிடைக்கிறது.பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வருவதை நினைத்து குடும்பமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.

பரிசாக வரும் காரை வைத்து அக்காவின் திருமணத்தை நல்லவிதமாக நடித்திவிடலாம் என ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டமிடுகிறார். ஆனால் அண்ணன் கருணாகரன் எப்படியாவது அந்தக் காரை தனதாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்.

இதனால் ஏற்படும் பிரச்சனையில் தகராறு பெரிதாகி போலீஸ் ஸ்டேஷன்வரை செல்கிறது. வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் சுனில் ரெட்டி ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி அவரை அடையத் துடிக்கிறரா்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்பெக்டரின் காமப்பிடியில் சிக்காமல் எப்படி தப்பிக்கிறார்….

கார் பரிசு யாருக்குக் கிடைத்தது என்பதை நகைச்சுவை கலந்த திரைக்கதை மூலம் விறுவிறுப்பான முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சார்லஸ்.

மொத்த படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தாங்குகிறார். படத்துக்கு படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வேடத்தில் நடித்திருக்கும் லட்சுமிபிரியா கவனம் ஈர்க்கிறார்.

ஐஸ்வர்யாவின் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம்போல் தன் தனித்துவமான வசன உச்சரிப்பால் காட்சியை கலகலப்பாக்குகிறார்.

பாலமுருகன் விக்னேஷ் இருவரும் இணைந்து செய்திருக்கும் ஒளிப்பதிவு படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது.

சரத், புவன் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து செய்திருக்கும் படதொகுப்பு கச்சிதமாக அமைந்து படத்துக்கு வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதைக்குத் தேவையானதை கொடுத்து விறுவிறுப்பு ஏற்படுத்தியிருக்கிறது. தரமான நகைச்சுவைப் படம் என்பதால் தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம.

மதிப்பெண் 3/ 5

Share.

Comments are closed.