Wednesday, October 28

Tag: spb last song

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்!

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்!

Uncategorized
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் 'என்னோட பாஷா' என்கிற பாடல். இது 'தேவதாஸ்  பார்வதி' என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன்.   இந்த 'தேவதாஸ் பார்வதி' அமேசான் பிரைம் டைமில்  OTT தளத்தில் வெளியாகவுள்ளது. எஸ்.பி.பி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி இருந்தாலும் அவரது கடைசிப் பாடல் இடம் பெற்றது என்கிற வகையில் இந்தப் படத்தில் வரும் அந்தப் பாடல் உலகின் கவனம் பெற்று ள்ளது.   'தேவதாஸ் பார்வதி' ஒரு  ஆந்தாலஜி படமாகும்.  அதன் கதை பிடித்துப்போய் தான் எஸ்பிபி இப்படத்திற்காகப் பாடினார். அந்தப் பாடலை 2020 ஜூலை இறுதியில் பாடிக் கொடுத்தார். ஆகஸ்டில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ...