Sunday, September 20

Tag: Sree Gokulam movies

புதிய ஃபேன்டஸி உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்

புதிய ஃபேன்டஸி உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்

News
நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது! புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால பி...

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து டிகன்கனா சூர்யவன்ஷி!

News
'ஹிப்பி' என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷியின் அழகு தோற்றமும், எல்லைகளைக் கடந்த தன்னிச்சையான நடிப்பும் ரசிகர்களை அச்சரியத்தில் மூழ்கடித்தன. தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் டிகன்கனா சூர்யவன்ஷியின் தமிழ்ப்பட அறிமுகம் குறித்து சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக ஆவலோடு காத்திருக்க, இப்போது ஹரீஷ் கல்யாணுடன் அவர் இணைந்து நடித்த 'தனுசு ராசி நேயர்களே' படம் வெளியாவது குறித்து அகமகிழ்ந்திருக்கின்றனர். பகட்டான அழகுப் பதுமையான டிகன்கனா ஹரீஷ் கல்யாணுடன் வெண்திரையைப் பகிர்ந்துகொண் டிரைலர் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழையில் அவரை நனையச் செய்யத் தொடங்கினர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் காணப்படும் டிகன்கனா சூர்யவன்ஷி படம் குறித்து என்ன சொல்கிறார்...? "'தனுசு ராசி நேயர்களே' டிரைலர் வெளியான பிறகு...
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

News
காதல் படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அதன் நேர்த்தியான இசை. 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசை மூலம் மீண்டும் இதை வெற்றிகரமாக மெய்ப்பித்திருக்கிறரா். ஹரீஷ் கல்யாண் நடித்து, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது குறித்து ஜிப்ரானை வெகுவாகப் புகழ்ந்த இயக்குநர் சஞ்சய் பாரதி, "நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன். இப்போது படத்தின...
தனுசு ராசி நேயர்களே! – ஜோதிடமல்ல… சினிமா பெயர்தான்!

தனுசு ராசி நேயர்களே! – ஜோதிடமல்ல… சினிமா பெயர்தான்!

News
ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இது ஒரு நம்பிக்கையாகவோ அல்லது வெறுமனே வேடிக்கையாகவோ ஜோதிடத்தின் மூலம் வரும் நாட்கள், வாரங்கள் அல்லது ஆண்டுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.   தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, "நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்தி...
ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படம்…

ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படம்…

News
ஹரிஷ் கல்யாண் இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஒரு புதிய அலையை உருவாக்கி இருக்கிறார். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையான படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கை வைத்த "பியார் பிரேமா காதல்" படத்தினை தொடர்ந்து, அடுத்து 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' என்ற காதலை மையப்படுத்திய படமும், இளம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது அடுத்த படத்தை மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். சஞ்சய் இயக்குனர் விஜயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரொமாண்டி காமெடி படம் ஒரு இளைஞனின் "ஜோதிட நம்பிக்கைகள்" பற்றி பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளைஞன் மீது இந்த நம்பிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பேசுகிறது. சமீபத்தில் "காயம்குளம் கொச்சூன்னி" போன்ற பல பெரிய பட்ஜெட் மலையாள படங்களை ...