ராஜமௌலியின் ஃபிலிம் செட் பார்வையிட விரும்பும்இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!
'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி திரையரங்கில் தான் ஒரு குழந்தையாக மாறி குதூகலித்ததாக கூறினார்!
சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல்.
உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ பற்றி கலந்துரையாடினர்.
கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மன...

