Thursday, October 1

Tag: sultan review

சுல்தான் – விமர்சனம்

சுல்தான் – விமர்சனம்

Reviews
நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து ரெளடியிசம் செய்து, சென்னை மாநகரையே கலக்கி வரும் தாதா நெப்போலியன். அவரது மகனான கார்த்தி நன்கு படித்துவிட்டு மும்பாயில் பணியாற்றுகிறார். கார்த்தி ஒரு முறை தந்தையைக் காண ஊருக்கு வரும்போது, ஒரு குழு மோதல் நடைபெறுகிறது. இதில் நெப்போலியனின் அடியாட்கள் பலர் கொல்லப்படுகின்றனர். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவனின் தாயார், "உன் அப்பா அரிவாளைக் கொடுத்து யாரையாவது வெட்டச் சொல்லி உன்னை அனுப்புவாரா?"  என்று கேட்கும் கேள்வி கார்த்தியின் கண்ணை திறக்கிறது. அப்பாவின் ரெளடியிசம் பிடிக்காமல் கார்த்தி ஊருக்கு கிளம்ப முடிவு செய்கிறார். அப்போது திடீரென நெப்போலியன் இறந்து விட, கார்த்தி அடியாட்கள் அனைவரையும் திருத்தி, புது வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார். கிராமம் ஒன்றில் விவசாய நிலங்களை ஆக்ரமித்து தொழிற்சாலை கட்ட நினைக்கும் கார்ப்பரேட் முதல...