“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !
நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங்கள் குறிப்பிடதகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம்” படத்தில...
