‘தலைவர் 170’ படப்பிடிப்பு துவங்கியது!
பிரமிப்பூட்டும் நட்சத்திரங்களுடன் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியது!
அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் விதமான பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரிப்பதற்காகவே பெயர்பெற்ற நிறுவனமான லைகா புரோடக்ஷ்ன்ஸ், தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில் ‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக நோக்கிலான கருத்து கொண்ட படங்களுக்காக அறியப்படும் இயக்குநர் TJ ஞானவேல் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார்.
2.O, தர்பார் மற்றும் லால் சலாம் படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் கூட்டணியில் நான்காவதாக உருவாகும் ‘தலைவர் 170’ ஒரு பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது.
பேட்ட, தர்பார் ஹிட் படங்களுடன் சமீபத்திய ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ ப...







