Friday, October 23

Tag: suresh kamatchi

மாநாடு படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி!

மாநாடு படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி!

News
  வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. இதில் 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்.. இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி. ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்...

“பாரதியின் வாக்கைப் பேசிய ஜோதிகா” – சுரேஷ் காமாட்சி

News
திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரைப் பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கொரானா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது. இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்- அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம். ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர். ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது? உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்ட்டட் இந்துவாகத்தானே இருக்கிறார்? அவர் எப்படி ஒரு மதம் சார்ந்து பேசியிருக்கக்கூடும்?? அவரின் அடிப்படை மனிதத்தன்மையில் இருந்து யோசித்...
“மாநாடு” தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உதவி!

“மாநாடு” தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உதவி!

News
சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! கொரோனாவால் உலகமே அவரவர் வீட்டிலிருக்கிறோம். அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வயிறு நிறையும் என்ற நிலை இந்த கனவு சொர்க்கத்தில் இன்றும் இருக்கிறது. சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு (Film Employees Federation of South India ) வழங்கினார் "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி !...
குளியலறையிலேயே படமாக்கப்பட்ட  படம் ‘ரூம்’!

குளியலறையிலேயே படமாக்கப்பட்ட படம் ‘ரூம்’!

News
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த 'அம்முவாகிய நான்' மற்றும் 'நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’ படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.. அந்தவகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசி...
திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

Articles
சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய 'மிக மிக அவசரம்' படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெறும் 17 திரையரங்குகளே தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப்போனது. திரைப்படம் தயாரிப்பதைவிட, அதைத் திரையரங்கில் வெளியிடுவதற்கு அதிக செலவாகும் என்ற அநியாய அராஜகத்தில் தமிழ்ப் படவுலகம் சிக்கிக்கொண்டிருப்பதால்தான், பல படங்கள் இன்று வெளியாகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. 'மிக மிக அவசரம்' படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 85 லட்சம் ரூபாய்வரை புரொமேஷனுக்கு செலவிட்ட நிலையில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. சித்தார்த் நடித்த 'அருவம்', தமன்னா நடித்த 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்கள் 11ஆம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பின் பேரில், ஏற்கெனவே 'மிக மிக அவசரம்' படத்தை திரையிட ஒப்புக்கொண்டிருந்த திரையரங்குகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொ...
சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு கைவிடப்பட்டது!

சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு கைவிடப்பட்டது!

News
வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார...
சிம்பு  நடிக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறது!

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு மலேசியாவில் துவங்குகிறது!

News
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.   கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.   முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த படம் அறிவிக்கப்பட்டு பல...