Wednesday, September 23

Tag: suseendran

கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்வேன் – நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை!

கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்வேன் – நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை!

News
கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர் டிசிவா, தயாரிப்பாளர் பால்டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர்...
கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா!

கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா!

News
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று (15.03.2019) அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந் தளித்து உபசரித்தார்....
சந்தி  சிரிக்கப்போகும் சர்வதேசப் படவிழா

சந்தி சிரிக்கப்போகும் சர்வதேசப் படவிழா

News
  16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 13ஆம் தேதியிருந்து 20ஆம் தேதிவரை சென்னையில் நடக்கவிருக்கிறது. மாநில அரசு நிதியுதவியுடன், ஐ.சி.ஏ. பவுண்டேஷன் என்னும் தனியார் அமைப்பு நடத்தும் இந்த விழா குறித்து அறிவிப்புகள் வந்ததுமே பிரச்னைகளும் ஆரம்பித்துவிட்டன. காரணம் போட்டிப் பிரிவில் கலந்து கொள்ள 20 படங்கள் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது ஐ.சி.ஏ. இப்படங்கள் எந்த விதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன, தேர்வு செய்த குழுவினர் யார் என்றெல்லாம் கேள்விகள் எழுப்பத்தொடங்கியிருக்கின்றனர் தமிழ்ப்படவுலகினர். இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு பிரமுகர் கூறியதாவது... சென்னை சர்வதேசப் படவிழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் நதியுதவி மட்டும் கூடிக்கொண்டேபோகிறது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் அலட்சியப்போக்குடனே...