தயாரிப்புத் துறையில் தடம் பதிக்க தயாராகும் தாரகைகள்!
இளம் தலைமுறையின் பிரதிபலிப்பாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா!
*'டேக் எ ஷாட்' ; புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இளம் திறமைசாலிகள் ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா*
தமிழ் திரைப்பட உலகில் பல திறமையான இளம் கலைஞர்கள் உருவாகி வந்தாலும், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை தங்களுக்கென ஒரு தனித்துவமான படைப்பாற்றல் அடையாளமாக மாற்றிக் கொள்வோர் மிகச் சிலரே. அந்த வகையில், தொழில்துறையின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான படைப்புகளில் பணியாற்றி மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றுள்ள இளம் தயாரிப்பாளர்களான ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா இணைந்து, வலுவான கதையம்சங்களும் நவீன சிந்தனைகளும் கொண்ட படைப்புகளை உருவாக்கும் நோக்கில் தங்களது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘டேக் எ ஷாட்’ (Take A Shot)-ஐ தொடங்கியுள்ளனர்.
வெறும் 29 வயதிலேயே திரைப்படத...
