இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 இல் தமன்னா வீடு!
‘ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 இல் தமன்னா பாட்டியாவின் சரணாலயமாக இருக்கும் அவரது வீடு காட்டப்படவுள்ளது!
சென்னை, மார்ச் 19, 2021: தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமாக நடிகைகளில் ஒருவாரான, தமன்னா பாட்டியா ரசிகர்களின் மனங்களில் குடிகொண்டுள்ளார் மற்றும் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். ‘ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் இதயம் இருக்குமிடம்’ சீசன் 4 – ன் இந்த அத்தியாயத்தில், தான் திரைநட்சத்திரமாக இல்லாமல், ஒரு தாய்க்கு மகளாக இருக்கும், தனது தனிப்பட்ட சரணாலயமாகத் திகழும் தன்னுடைய வீட்டிற்கு, தமன்னா உங்களை அழைத்துச் செல்லவுள்ளார். படப்பிடிப்புகள் காரணமாக எப்போதும் பரபரப்பாகவும், பயணித்தபடியும் இருக்கும் அவர் வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவாகவே இருந்தாலும், அது அவர் எப்போதும் விரும்பும் நேரமாக இருக்கும். ஒரு திரைப்பட நடசத்திரமாக தன்னைச் சுற்றியிருக்கும...








