கன்னட திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப் படம்!
கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது!
ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.
கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையு...

