தலைமைச் செயலகம் – விமர்சனம்
தரமான தமிழ் படங்களை சமரசம் இன்றி பெரிய திரையில் கொடுத்த இயக்குனர் வசந்த பாலன் அதேபோல் சமரசம் இன்றி தலைமைச் செயலகம் என்ற இணைய தொடரை சின்னத்திரையில் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஓர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் அரசியல் ஆலோசகர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.
இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கிய நபரை கொலை செய்து விட்டு தப்பி சென்ற துர்கா என்கிற பெண்ணை சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனன் ஒரு பக்கம் தேடுகிறார் .
இந்நேரத்தில் ஒரு போலீஸ் கொடூரமாக கொல்லப்பட, உயர் அதிகாரியான பரத் இந்த வழக்கை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் துர்காவை தேடும் சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனனுடன் பரத் இணையும் சந்தர்ப்...
