தண்டேல் – விமர்சனம்
தண்டேல் – விமர்சனம்
மீன் பிடித்தலை தொழிலாகக் கொண்ட மக்கள் தங்கள் தலைவனை தண்டில் என்று அழைப்பது வழக்கம். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் தலைவன் தண்டேல் நாக சைதன்யா தலைமையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஒன்பது மாதங்கள் அங்கு தங்கி மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து மூன்று மாதங்கள் தங்கள் சொந்த ஊரில் ஓய்வெடுப்பது அவர்களது வாடிக்கை. சிறு வயது முதல் ஒன்றாக வளரும் நாக சைதன்யாவும் சாய்பல்லவியும் உயிருக்கு உயிராக வெறித்தனமாக காதலிக்கின்றனர். மீன் பிடித்தல் ஆபத்தான தொழில் என்பதால் நாக சைதன்யா அதில் ஈடுபட வேண்டாம் என சாய்பல்லவி அவருக்கு அன்புடன் கட்டளையிடுகிறார். ஆனால் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொள்வதாக சொல்லும் நாக சைதன்யா மீண்டும் மீன் பிடிக்க சென்று விடுகிறார். இதன் காரணமாக சாய் பல்லவி அவருடன் கோபித்துக் கொண்டு தொலைபேசியில...
