ஜூன் 4ல் வெளியாகும் ஃபேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன்!
ராஜ் மற்றும் டிகேயின் புகழ்பெற்ற தி ஃபேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ!
ஜூன் 4ல் வெளியாகும் புது சீரிஸை புதிர் ததும்பும் ட்ரெய்லர் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது!
தி ஃபேமிலி மேன் புதிய (The Family Man) சீரிஸுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்பட 240 நாடுகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த சீரிஸை மக்கள் கண்டு களிக்கலாம். ராஜ் மற்றும் டிகேவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த புதிய சீரிஸில் பத்மஸ்ரீ மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிப் ஹாஷ்மி, சீமா பிஸ்வாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சமந்தா அகினேனி முதல்முறையா ஓடிடி டிஜிட்டல் தளத்தில் தடம் பதித்திருக்கிறார்.
தி ஃபேமிலி மேன் (The Family Man) சீரிஸ் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்கு ஓர் முற்றுப்புள்ளி. அவர்களின் எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில், அமே...




