தேள் – விமர்சனம்
தேள் - விமர்சனம்
தன் கொடுக்கையும் அதில் உள்ள விஷத்தையும் மறந்து, தேனாக கிடைத்த திடீர் பாசத்துக்கு பலியான ஒரு தேளின் கதைதான் தேள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம், அடியாளாக வேலை பார்த்து, தவணை தவறிய தண்டல் தொகையை தாக்குதல் மூலமே பெற்றுத் தருவதுதான் பிரபுதேவாவின் வேலை.
மூர்க்கத்தனமாக மனிதர்களை தாக்கி அடித்து துன்புறுத்தும் பிரபுதேவா, வீட்டுக்கு வந்ததும் பார்ப்பதுகூட டிஸ்கவரி சேனலில் மான்களை புலி வேட்டையாடும் படத்தைதான் என்ற காட்சி மூலம் புிரபுதேவாவின் கேரக்டரையே விளக்கி விடுகிறார் இயக்குநர்.
அம்மா அப்பா என எந்த உறவும் இல்லாமல் தனிமரமாக, வாழும் பிரபுதேவாவிடம் திடீரென ஈஸ்வரிராவ் வந்து "நான்தான் உன்னை பெற்ற அம்மா....பிறந்ததும் அனாதையாக விட்டுச் சென்றதற்கு என்னை மன்னித்துக்கொள்..." என்கிறார்.
கோபமும் ஆத்தரமும் ஒன்று சேர ஈஸ்வரராவை அறைந்தாலும், பின்னர்...
