தீர்க்கதரிசி – திரைப்பட விமர்சனம்
தீர்க்கதரிசி - திரைப்பட விமர்சனம்
வழக்கமான பாணி திரைப்படங்களையே பார்த்து சலித்த மனங்களுக்கு தீர்க்கதரிசி திரைப்படம் கண்டிப்பாக ஒரு மாறுபட்ட விருந்தாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றபவர் சீமான்.
மரங்கள் நிறைந்தஅடையாறு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் உள்ள பெண் கொல்லப்படப்போகிறாள் என்று ஒரு நாள் போன் வருகிறது.
அந்த தொலைபேசி தகவலை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் அலட்சியப்படுத்தவே, நிஜமாகவே ஒரு பெண் கொல்லப்படுகிறாள்.
அடுத்ததாக அண்ணாசாலையில் விபத்தி ஒன்று நடக்கப்போவதையும் அதில் ஒருவர் இற்கப்போவதையும் சொல்லி எச்சரிக்கிறது அந்த மர்மக் குரல்.
போலீசார் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்போதே, அந்த விபத்து நடந்து ஒருவர் இறந்து போகிறார்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மட்டும் தகவல் தராமல் ஊடகங்களுக்கும் இந்த செய்தியை சொல்லுகிறது ...
