![]()

வழக்கமான பாணி திரைப்படங்களையே பார்த்து சலித்த மனங்களுக்கு தீர்க்கதரிசி திரைப்படம் கண்டிப்பாக ஒரு மாறுபட்ட விருந்தாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றபவர் சீமான்.
மரங்கள் நிறைந்தஅடையாறு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் உள்ள பெண் கொல்லப்படப்போகிறாள் என்று ஒரு நாள் போன் வருகிறது.
அந்த தொலைபேசி தகவலை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் அலட்சியப்படுத்தவே, நிஜமாகவே ஒரு பெண் கொல்லப்படுகிறாள்.
அடுத்ததாக அண்ணாசாலையில் விபத்தி ஒன்று நடக்கப்போவதையும் அதில் ஒருவர் இற்கப்போவதையும் சொல்லி எச்சரிக்கிறது அந்த மர்மக் குரல்.
போலீசார் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்போதே, அந்த விபத்து நடந்து ஒருவர் இறந்து போகிறார்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மட்டும் தகவல் தராமல் ஊடகங்களுக்கும் இந்த செய்தியை சொல்லுகிறது அந்த மர்மக்குரல்.
பொது மக்கள் இது குறித்து பரபரப்பாக பேச ஆரம்பிப்பதுடன் அந்த மர்மக்குரலுக்கு சொந்தக்காரர் ஒரு தீர்க்கதரிசி என்று பெயர் வைத்து விடுகின்றனர்.
யார் அந்த தீர்க்கதரிசி என்று கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல் துறை அதிகாரி அஜ்மலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அவருக்கு உதவியாக ஜெய்வந்த்தும், ஜெய் துஷ்யந்தும் நியமிக்கப்படுகின்றனர். இந்த மூவர் குழு தீர்க்கதரிசியை கண்டுபிடித்தார்களா…. எப்படி அவரால் நடக்கப்போவதை எல்லாம் சொல்ல முடிந்தது என்பதை சுவாரஸ்யம் பொங்க சொல்லியிருக்கும் படம்தான் திீர்க்கதரிசி.
துவக்கத்திலிருந்து இறுதிவரை பரபரப்பான காட்சிகள் படம் முழுக்க விரவியிருக்கின்றன.
படம் பார்ப்பவர்களை இருக்கை நுனியிலேயே இருத்தி வைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்ட திரைக்கதையை அமைத்து படத்தைத் தயாரித்திருப்பவர் பி.சதீஷ் குமார்.
இரட்டை இயக்குநர்கள் பிஜி மோகன் மற்றும் என் ஆர் சுந்தரபாண்டி இருவரும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் அந்தத் திரைக்கதையை அழகாக திரையில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்த இரட்டை இயக்குநர்களுக்கு பக்க பலமாக நின்று படத்துக்கு பலம் சேர்ப்பது ஜி.பாலசுப்ரமணியனின் பின்னணி இசையும், ஜே. லக்ஷ்மணின் நேர்த்தியான ஒளிப்பதிவாளரின்தான்.
மனோதத்துவ நிபுணராக வரும் ஓய்.ஜி.மகேந்திரன் மர்மக்குரலுக்கு சொந்தக்காரர் ஒரு தீர்க்கதரிசிதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பதினைந்தாம் நூற்றாண்டில் வாழந்த நாஸ்டர்டாம் சொன்னது எல்லாம் இன்றளவில் உலகங்கும் நடந்துகொண்டிருப்பதுதான் என சொல்வது படத்தை மேலும் சுவாரஸ்யமாக்கி, பார்வையாளர்களை பரபரப்புக்குள்ளாக்குகிறது.
படத்தின் இறுதிப்பகுதியில்தான் சத்தியராஜ் வருகிறார் என்றாலும் அவரது குரல் முதல் முறையாக கேட்கும்போதே அடையாளம் காண முடிவது படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது.
கண்டிப்பாக காண வேண்டிய வித்தியாசமான படம் தீர்க்கதரிசி மதிப்பெண் 3.5 5

