Friday, October 23

Tag: Thirain marupakkam review

திரையின் மறுபக்கம் – விமர்சனம்

திரையின் மறுபக்கம் – விமர்சனம்

Reviews
லியோ படம் வெளியாகும்போதே தனது திரையின் மறுபக்கம் படத்தை வெளியிடும் துணிச்சலுக்காக தயாரிப்பாளரையும், சினிமா உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக இயக்குனர் நிதின் சாம்சனையும் முதலில் பாராட்டி விடலாம். சினிமாவில் அதீத ஆசையுள்ள விவசாயி சத்திய மூர்த்தி நடிகருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட பாவத்துக்கு விலையாக,  கிராமத்தில் உள்ள விவசாய நிலம், சென்னையில் வசிக்கும் சொந்த வீடு என்று ஆரம்பித்து மனைவி அணிந்திருக்கும் தாலிச் சரடுவரை எப்படி எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை விவரித்திருக்கும் படம்தான் திரையின் மறுபக்கம். படத்தில் இடம் பெறும் பல நகைச்சுவைக் காட்சிகள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. உதாரணமாக படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரிலீஸ் பண்ண முடியாத கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளரிடம் சாப்பாட்டுக்கு இயக்குநரும் உதவி இயக்குநரும் பணம் கேட்க, வெகு சீரியசாக தனது ப...