Friday, October 23

Tag: trajendar

பாரதிராஜா மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்!

பாரதிராஜா மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்!

News
பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்! 'என் இனிய தமிழ் மக்களே'... என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட அந்த தென்பாண்டி சிங்கமாம், தேனீ பக்கத்துல இருந்து வந்த தங்கமாம், தமிழ் திரை உலகத்தின் தலையாய அங்கமாம், இயக்குனர் இமயமாம் ஐயா பாரதிராஜா அவர்களுடைய மறைவு மனதை வாட்டுகின்றது. 16 வயதினிலே படத்திலே மயிலை படைத்தவர். கிழக்கே போகும் ரயிலில் ரயிலை குயிலாய் கூவி அழைத்தவர். புதிய வார்ப்புகளை வார்த்தவர். சிகப்பு ரோஜாக்களை விதைத்தவர். நிறம் மாறாத பூக்களாய் நிலைத்து நின்றவர். மண்வாசனையை பரப்பியவர். கிழக்கு சீமையிலே என்று கிளர்ந்தெழுந்து நின்றவர். முதல் மரியாதையை கண்டவர். தமிழ் திரை உலகத்தின் தலையாய மரியாதையை வென்றவர். அவருடைய மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகின்றது. நெஞ்சம் தாங்கவில்லை. எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்து ரசிக பெரு...
டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படும் உயிருள்ளவரை உஷா”!

டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படும் உயிருள்ளவரை உஷா”!

News
டி ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா" மீண்டும் 4k டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுகிறது! இப்படத்தின் ஏழு பாடல்களையும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. டி.ராஜேந்தர் TR Digi Music என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி, இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி டி.ஆர்.சிலம்பரசன் பிறந்தநாள். ஆறாம் தேதி சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் படம் வெளிவருகிறது. பொங்கலுக்கு வரவேண்டிய இளைய தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் பிப்ரவரி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பிப்ரவரி மாதம் டி.ராஜேந்தரின் 'உயிருள்ளவரை உஷா' மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது! தமிழகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் நளினி, சரிதா, கவுண்டமணி, ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி, இடிச்சபுளி செ...
டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தும் T.R Digi Music

டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தும் T.R Digi Music

News
  டிஜிட்டல் இசை உலகில் புதிய அத்தியாயம் – “T.R Digi Music” ஐ அறிமுகப்படுத்தும் டி. ராஜேந்தர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டி. ராஜேந்தர், இன்றைய டிஜிட்டல் தலைமுறையை நோக்கி உருவாக்கப்பட்ட தனது புதிய டிஜிட்டல் இசை நிறுவனமான T.R Digi Music ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இசை கேட்கும் பழக்கங்கள் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில், Gen Z மற்றும் இளம் டிஜிட்டல் ரசிகர்களை மையமாகக் கொண்டு, நவீன தொழில்நுட்பம், சமகால ஒலி வடிவமைப்பு மற்றும் காலத்தால் அழியாத உணர்வுகளை இணைக்கும் நோக்கத்துடன் T.R Digi Music உருவாக்கப்பட்டுள்ளது. முதல் வெளியீடு: காலத்தால் மறக்க முடியாத இசைக்கு நவீன உயிர்ப்பு T.R Digi Music நிறுவனத்தின் முதல் வெளியீடாக, டி. ராஜேந்தரின் மெகா ஹிட் திரைப்படமான “உயிருள்ளவரை உஷா” படத்தின் அ...
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டி!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டி!

News
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்! தயாரிப்பாளர் சங்க தேர்தலில் திரு. டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மன்னன் பிலிம்ஸ் திரு.மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்க்ப்படும் என்று கூறியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு தாய் வீடு. வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பதவிக்கு நான்போட்டியிடுகிறேன். என்னுடன் மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று டி.ராஜேந்தர் கூறினார். மேலும் 7 மாதங்களுக்கும் மேலாக முடிக்கிடக்கும் திரையரங்குகளை 50 சதவிதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு டிக்கேட்களுக்கு விதிக்கப்படும் 12% GST வரியை ந...
தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை!

தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை!

News
தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை!  02.09.2020 அன்று தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்: 1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் நமது திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது. ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிகரமாக ஒரு விநியோகஸ...