ட்ராமா _ விமர்சனம்
ட்ராமா _ விமர்சனம்
நாடெங்கும் புற்றிசல் போல் பல்கிப் பெருகி இருக்கும் 'கரு'த்தரிப்பு மையங்களை 'கரு'வாகக் கொண்ட கதை இது.
விவேக் பிரசன்னா சாந்தினி தமிழரசன் தம்பதியினர் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு தேடி ஒரு கருத்தரிப்பு மையத்தை அனுகுகின்றனர்.
சில நாட்களில் சாந்தினி கர்ப்பமடைகிறார்.
இனியாவது அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக கடந்ததா என்றால் அதுதான் இல்லை.
இதே காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனராக வரும் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா ரவியை காதலிக்கிறார் பிரதோஷ்.
காதலர்கள் இருவரும் சற்றே அத்துமீறவே பூரணிமா கர்ப்பம் அடைகிறார்.இந்த சூழலில் பிரதோஷ் கொல்லப்படுகிறார்.
கருத்தரிக்காமல் கவலையில் வாழும் மனைவி, மற்றும் கணவனே இல்லாமல் கருத்தரித்த பெண்ணைப் பற்றிய கதை இது.
கதையின் நாயகன் பாத்திரத்தில் வரும் பிரசன்னா நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.
அவருக்கு இணையாக வரும் சாந்தினி தமிழரசனும் முதிர்ச்சி...
