ட்ராமா _ விமர்சனம்
நாடெங்கும் புற்றிசல் போல் பல்கிப் பெருகி இருக்கும் ‘கரு’த்தரிப்பு மையங்களை ‘கரு’வாகக் கொண்ட கதை இது.
விவேக் பிரசன்னா சாந்தினி தமிழரசன் தம்பதியினர் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு தேடி ஒரு கருத்தரிப்பு மையத்தை அனுகுகின்றனர்.
சில நாட்களில் சாந்தினி கர்ப்பமடைகிறார்.
இனியாவது அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக கடந்ததா என்றால் அதுதான் இல்லை.
இதே காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனராக வரும் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா ரவியை காதலிக்கிறார் பிரதோஷ்.
காதலர்கள் இருவரும் சற்றே அத்துமீறவே பூரணிமா கர்ப்பம் அடைகிறார்.இந்த சூழலில் பிரதோஷ் கொல்லப்படுகிறார்.
கருத்தரிக்காமல் கவலையில் வாழும் மனைவி, மற்றும் கணவனே இல்லாமல் கருத்தரித்த பெண்ணைப் பற்றிய கதை இது.
கதையின் நாயகன் பாத்திரத்தில் வரும் பிரசன்னா நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.
அவருக்கு இணையாக வரும் சாந்தினி தமிழரசனும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நெஞ்சில் நிறைகிறார்.
மற்றும் பூர்ணிமா ரவி பிரதோஷ ஆனந்த் 4 ரமா பிரதீப் கே விஜயன் ஆகியோரும் அளவான மீட்டரில் அழகாக நடித்திருக்கின்றனர்.
படத்தில் பாராட்டுக்குரிய முதல் நபர் படத்தொகுப்பாளர் முகன் வேல். முன்னும் பின்னுமாக நடக்கும் காட்சிகளை நான் லீனியர் முறையில் நேர்த்தியாக படத்தொகுப்பு செய்து பாராட்டுப் பெறுகிறார் படத்தொகுப்பாளர் முகன் வேல்.
மருத்துவம் என்ற போர்வையில் நடக்கும் அராஜகங்களை, குறிப்பாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பற்றிய கதையாக உருவாக்கியதற்காக படக்குழுவை தாராளமாக பாராட்டலாம்.
வித்தியாசமாகச் செல்லும் இந்த விறுவிறுப்பான த்ரில்லரை தாராளமாக ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.