Sunday, September 20

Tag: trip

முற்றிலும் புதிய பாணியில் உருவான “ட்ரிப்” திரைப்படம்!

முற்றிலும் புதிய பாணியில் உருவான “ட்ரிப்” திரைப்படம்!

News
நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள். “ட்ரிப்” படத்தின் ட்ரெய்லர் படக்குழு மற்றும் பத்திரிகையாளர் முன்னிலையில்  வெளியானது. விழாவினில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறியதாவது... இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு...
“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u “ !

“ட்ரிப்”படத்தின் அசத்தும் முதல் சிங்கிள் “what a life – u “ !

News
தமிழில் ஒர் புதுமையாக காமெடி, அட்வெஞ்சர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் “ ட்ரிப் “ திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதலே அனைவரிடத்திலும் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளியடப்பட்ட டீசரும், டிரெய்லரும் ரசிகர்களிடம் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், திரையரங்கில் அட்டகாசமான கொண்டாட்டம் உண்டென, உத்தரவாதம் தந்துள்ளது. இந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள முதல் சிங்கிள் பாடலான “what a life - u” பாடல் படத்தின் மீது இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “சிவப்பு, மஞ்சள், பச்சை” படப்புகழ் இசையமைப்பாளர் சித்து தந்துள்ள பெப்பியான இசை, கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களை, தனது கொண்டாட்ட வரிகளில் புட்டு வைக்கும் மோகன் ராஜனின் வரிகள், கேட்டவுடன் பிடித்துபோகும் பாடகர் கானா பாலாவின் குரல், அட்டகாச கலவையாக உருவாகியுள்ள இந்த “what a life - u” பாடல் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக...
‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

‘ட்ரிப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

News
பிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடித்த சாகசம் மிக்க திரில்லர் ஃபேன்டசி வகைப்படமான 'ட்ரிப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டெனிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. காரணம் அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த சாகசப் படத்தின் படப்பிடிப்பே சவால்களும் சாகசங்களும் நிரம்பியதாக இருந்ததுதான். இது குறித்து விவரித்த இயக்குநர் டெனிஸ்... "ஒரு வழியாகப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டோம். சற்றே சவால்கள் மிக்கதாக இருந்தாலும், எங்கள் பணியை நாங்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ச்சியுடன்தான் செய்து முடித்தோம். முதல் கட்டப் பிடிப்பு தலக்கோணாவில் நடந்த போதும் சரி, வனப்பிரதேசங்களில் நடந்தபோதும் சரி, முன்னறிவிப்பு எதுவுமின்றி பல்...
சாகசம் + காமெடி =ட்ரிப்

சாகசம் + காமெடி =ட்ரிப்

News
யோகி பாபு கருணாகரன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகர்கள். இருவரும் வேறு வேறு பாதையில் ரசிகர்களை தங்களது தனிப்பட்ட திறமைகள் மூலம் கவர்ந்து தங்களுக்கான தடத்தை பதித்தவர்கள்.  அந்த  வகையில் தற்போது இருவரும் இணைந்து  டார்க் காமெடி கலந்த, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ‌ திரில்லர் படமான “ட்ரிப்” மூலம் ரசிகர்ளை மகிழ்விக்க வருகிறார்கள். “டார்லிங்” , “100” படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனின் இணை இயக்குநர் டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் டென்னிஸ் படத்தினை பற்றி கூறியது.. “ட்ரிப்” திரைப்படம் உல்லாச பயணத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர். இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்  வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள்,   அப்பயணத்தை  அட்வெஞ்சராக்குகிற...
யோகிபாபு நடிக்கும் ட்ரிப்!

யோகிபாபு நடிக்கும் ட்ரிப்!

News
பருவ மழை பொய்த்துப் போகிறதா, சரியாகப் பெய்கிறதா தெரியவல்லை. ஆனால் யோகி பாபுவின் காட்டில் பெய்யும் அடைமழை அதிகரித்துக்கொண்டே போவதென்னவோ நிஜம். யோகி பாபு பிரதான வேடத்தில் நடிக்கும் ட்ரிப் என்ற படத்தின் அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்பட்டிருக்கிறது. கதை நாயகனாக யோகி பாபு நடிக்க, சுனைனா மற்றும் கருணாகரன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதர வேடங்களுக்கான நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. ரசிகர்களை இருக்கையின் நுனி்க்கே வரவழைக்கும் அளவுக்கு கதையும் காட்சியமைப்பும் அமைந்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். ஜி.உதயசங்கர் ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்க, தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஏ.விஸ்வநாதன் மற்றும் ப்ரவீன் குமார் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ட்ரிப் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது....