‘டியர் ஜீவா’ டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு!
தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘டியர் ஜீவா’
தரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார்.
...

